×

அரசியல் அழுத்தம் காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்.பி. பணி ஓய்வு பெற்றதாக உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது: டிஜிபி அலுவலகம் விளக்கம்

கள்ளக்குறிச்சி: அரசியல் அழுத்தம் காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் பணி ஓய்வு பெற்றதாக உண்மைக்கு மாறான தகவல் பரப்படுவதாக டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி எஸ்பி விருப்ப ஓய்வு விவகாரம் தொடர்பாக டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக இருப்பவர் மோகன்ராஜ். இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக பணிபுரிந்து வருகிறார். மோகன்ராஜ் அரசியல் அழுத்தம் காரணமாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் மன உளைச்சல் காரணமாக விருப்ப பணி ஓய்வு கொடுத்திருப்பதாகவும், இது தொடர்பாக உள்துறை செயலாளரிடம் அவர் மனு அளித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், 1987-ம் ஆண்டு நேரடி உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த மோகன்ராஜ், பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். காவல்துறையில் சுமார் 36 வருடங்களாக சிறப்பாக பணியாற்றி உள்ளார். கள்ளக்குறிச்சி எஸ்.பி. மோகன்ராஜ் உடல்நிலையை கருத்தில் கொண்டும், பிற சொந்த காரணங்களுக்காகவும் விருப்ப ஓய்வு கோரி உள்ளார். அரசியல் அழுத்தம் காரணமாக பணி ஓய்வு பெற்றதாக உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது, அதை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசியல் அழுத்தம் காரணமாக கள்ளக்குறிச்சி எஸ்.பி. பணி ஓய்வு பெற்றதாக உண்மைக்கு மாறான தகவல் பரப்பப்படுகிறது: டிஜிபி அலுவலகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Kallakurichi SP ,DGP ,Kallakurichi ,Kallakurichi S.P. ,Mohanraj ,Dinakaran ,
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...